மூத்த குடிமகன்களுக்கான தேசியக் குழுவின் 3வது கூட்டம்
June 15 , 2018 2613 days 852 0
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்வந்த் கெலாட் புதுதில்லியில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் நடத்தப்பட்ட மூத்த குடிமகன்களுக்கான தேசியக் குழுவின் 3வது கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
இந்த குழு மத்திய மாநில அரசுகளுக்கு மூத்த குடிமகன்களின் நலன் சார்ந்த விவகாரங்களிலும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் விவகாரங்களிலும் ஆலோசனை அளிக்கின்றது.
இந்தக் குழு ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு முறை கூடும். இதன் முதல் கூட்டம் 2016ம் ஆண்டு ஆகஸ்டு 30ம் தேதி நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் 2017ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி நடைபெற்றது.