மூத்தோருக்கான 83-வது தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2019
February 21 , 2019 2493 days 815 0
2019 ஆம் ஆண்டில் கெளஹாத்தியில் நடைபெற்ற யுனெக்ஸ் - சன்ரைஸின் மூத்தோருக்கான 83-வது தேசிய பேட்மிண்டன் (இறகுப் பந்து) சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஒற்றையர் பட்டத்தை சவ்ரப் வெர்மா வென்றுள்ளார்.
இறுதிப் போட்டியில், இவர் லக்சயா சென்னைத் தோற்கடித்தார். இது வெர்மாவின் மூன்றாவது தேசியப் பட்டமாகும்.
இதற்குமுன், அர்ஜீன் எம் ஆர் மற்றும் சலோக் இராமச்சந்திரன் என்ற ஜோடியை பிரணவ் ஜெர்ரி சோப்ரா மற்றும் சிராக் ஷெட்டி என்ற ஜோடி வீழ்த்தி ஆண்களுக்கான இரட்டையர் பட்டத்தை வென்றது.