TNPSC Thervupettagam

மூன்று DPSU நிறுவனங்களுக்கு மினிரத்னா அந்தஸ்து

June 6 , 2025 3 days 26 0
  • பாதுகாப்பு அமைச்சகமானது கீழ்க்காணும் நிறுவனங்களுக்கு முதலாம் வகை 'மினி ரத்னா' அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
    • இந்திய வெடிமருந்துகள் உற்பத்திக் கழக லிமிடெட் நிறுவனம் (MIL),
    • ஆயுதமேந்திய வாகனங்கள் உற்பத்திக் கழக நிகாம் லிமிடெட் (AVNL), மற்றும்
    • இந்தியா ஆப்டெல் லிமிடெட் (IOL)
  • மினிரத்னா திட்டம் ஆனது 1997 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • மினிரத்னா அந்தஸ்து பெறுவதற்கான தகுதிகள் பின்வருமாறு
    • கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக லாபத்தை அடைந்திருக்க வேண்டும்.
    • இந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஓராண்டிலாவது 30 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பிலான வரிக்கு முந்தைய இலாபத்தை எட்டி இருக்க வேண்டும்.
    • நேர்மறை நிகர மதிப்பைப் பேண வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்