TNPSC Thervupettagam

மூன்று நாடுகளுக்கு இடையிலான வரலாற்று ஒப்பந்தம்

September 17 , 2026 3 days 40 0
  • ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை வெஸ்ட்மின்ஸ்டரிலிருந்து அதிக சுயநிர்ணய உரிமை மற்றும் அரசியலமைப்பு மாற்றத்தை கோரும் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன.
  • இந்த ஒப்பந்தம் கார்டிப்பில் மூன்று நாடுகளின் தலைவர்களால் கையெழுத்திடப் பட்டது மற்றும் ஜனநாயக ரீதியாக தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்று அது கூறுகிறது.
  • இது ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் அரசியலமைப்பு மாற்றங்களை தயார் செய்து வசதி செய்து தர பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
  • இந்த ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இருப்பிடமான வெஸ்ட் மின்ஸ்டருக்கு சவால் விடுகிறது, மேலும் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி துறைகளில் மூன்று நாடுகளுக்கு இடையே அதிக ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுக்கிறது.
  • ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள் மூன்று நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) ஒரு பகுதியாக இருக்கும் எதிர்காலத்தை ஆதரிக்கின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்