TNPSC Thervupettagam

மூப்பியல் மற்றும் முதியோருக்கான மருத்துவம் மீதான 4-வது சர்வதேச கருத்தரங்கு

November 25 , 2018 2437 days 736 0
  • மூப்பியல் மற்றும் முதியோருக்கான மருத்துவம் மீதான 4-வது சர்வதேசக் கருத்தரங்கை டாக்டர் ஜித்தேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
  • புது தில்லியின் அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (All India Institute of Medical Science - AIIMS) நடைபெற்ற ஆசிய பசிபிக் முதியோருக்கான மருத்துவ அமைப்பு கருத்தரங்குடன் இணைத்து இக்கருத்தரங்கும் நடத்தப் பட்டது.
  • இக்கருத்தரங்கின் தொலைநோக்குப் பார்வையானது உலகம் முழுவதும் உள்ள முதியோர்கள் நலனை மேம்படுத்துவதாகும்.
  • இக்கருத்தரங்கானது, “எதிர்காலத்தில் முதியோருக்கான மருத்துவ நடைமுறைகள் - தயாராக உள்ளீர்களா?” என்ற கருத்துருவுடன் நடைபெற்றது.
  • இக்கருத்தரங்கானது சுகாதார நலத்துறை நிபுணர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு மீண்டும் பயிற்சியளித்தல் ஆகியவற்றின் மீது கவனத்தை செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்