மூலதன ஆதாயக் கணக்குகள் (இரண்டாவது திருத்தம்) திட்டம், 2025
November 29 , 2025 6 days 51 0
இந்தத் திருத்தம், அதன் செயல்முறைகளை நவீனமயமாக்கவும் டிஜிட்டல் மயமாக்கவும் 1988 ஆம் ஆண்டின் மூலதன ஆதாயக் கணக்குத் திட்டத்தை (CGAS) புதுப்பிக்கிறது.
இது 54GA பிரிவு (தொழிற்சாலைகளை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மாற்றுவதன் மூலதன ஆதாயங்கள்) மற்றும் 54, 54B, 54D, 54F, 54G மற்றும் 54GB (மூலதன ஆதாய விலக்குப் பிரிவுகள்) ஆகிய பிரிவுகளைச் சேர்க்கிறது.
வைப்பு அலுவலகத்தின் வரையறையில் தற்போது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளும், 1949 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட எந்தவொரு வங்கியும் அடங்கும்.
UPI, உடனடி பண வழங்கீட்டுச் சேவை (IMPS), தேசிய மின்னணு நிதிப் பரிமாற்றம் (NEFT), நிகழ்நேர பெருந்திரள் தீர்வு பரிமாற்ற வசதி (RTGS), இணைய வங்கி மற்றும் கடன் / பற்று அட்டைகள் போன்ற புதிய டிஜிட்டல் பண வழங்கீட்டு முறைகள் தற்போது அனுமதிக்கப்படுகின்றன.
மின்னணு கணக்குப் புத்தகங்கள் மற்றும் டிஜிட்டல் கணக்கு அறிக்கைகள் ஆனது வைப்புத் தொகை, பணம் திரும்பப் பெறுதல் மற்றும் பரிமாற்றங்களுக்கு அனுமதிக்கப் படுகின்றன.
2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல், கணக்கு மூடல் ஆனது டிஜிட்டல் வழி கையொப்பம் அல்லது மின்னணுச் சரிபார்ப்புக் குறியீட்டை (EVC) பயன்படுத்தி இயங்கலையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.