மூலோபாய கூட்டுக்கொள்கையின் கீழ் முதல் ‘இந்தியாவில் தயாரித்தல்’ திட்டம்
August 26 , 2018 2676 days 861 0
21,000 கோடி ரூபாய் செலவில் இந்திய கடற்படைக்கு 111 பயன்பாட்டு ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது அரசாங்கத்தின் ‘இந்தியாவில் தயாரித்தல்’ திட்டத்திற்கு கணிசமான ஊக்குவித்தலை வழங்கும் நோக்கமுடைய, இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் மதிப்புமிக்க மூலோபாய கூட்டு (Strategic Partnership-SP) மாதிரியின் கீழ் செயல்படும் முதல் திட்டமாகும்.
இந்த (SP) ஆனது, வெளிநாட்டின் பெரிய ஆயுத தயாரிப்பாளர்களுடன் இணைந்து இந்திய தனியார் துறையின் மேம்பட்ட ஆயுதம் தயாரிக்கும் பங்கை அதிகரிக்க முற்படுகிறது.