மூலோபாய பெட்ரோலிய வளங்கள் திட்டத்தின் (strategic petroleum reserves) இரண்டாம் கட்டத்தின் கீழ், சண்டிகோல் மற்றும் படூர் ஆகிய இடங்களிலுள்ள 6.5 மில்லியன் மெட்ரிக் டன் சேமிப்பு திறன் கொண்ட மையங்களில் மேலும் இரண்டு வணிக மற்றும் மூலோபாய மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்திய அரசின் மூலோபாய பெட்ரோலிய வளங்கள் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் மூன்று இடங்களில் மொத்தம் 5.33 மில்லியன் மெட்ரிக் டன் சேமிப்புத் திறன் கொண்ட பெட்ரோலியச் சேமிப்பு கிடங்குகள் நிறுவப்பட்டன.
அவை,
விசாகப்பட்டினம்,
மங்களூரு மற்றும்
படூர்.
மூலோபாய பெட்ரோலிய வளங்கள் (இருப்புகள்) என்பது இயற்கைப் பேரிடர், போர் (அ) இதரப் பேரழிவுகளின் போது வழங்கீட்டில் ஏற்படும் இடையூறு போன்ற எந்தவொரு கச்சா எண்ணெய் தொடர்பான நெருக்கடியையும் சமாளிப்பதற்காக வேண்டி வைத்திருக்கப் படும் மிகப்பெரியச் சேமிப்புக் கிடங்கு ஆகும்.