மூளை அழற்சி, நீலநாக்கு வைரஸ் ஆகியவற்றைக் கண்டறிவதற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கருவிகள்
October 20 , 2019 2088 days 657 0
மத்திய அரசானது நீலநாக்கு இடையீட்டடுக்கு எலிசா மற்றும் ஜப்பானிய மூளை அழற்சி 1 ஜிஎம் எலிசா ஆகிய கருவிகளை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Council of Agricultural Research - ICAR) மற்றும் இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் கூட்டாக இணைந்து உருவாக்கப் பட்டுள்ளது.
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கருவிகள் இறக்குமதி செய்யப்பட்ட கருவிகளை விட பத்து மடங்கு விலை குறைவானதாகவும் நோய் வெடிப்பைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாகவும் விளங்குகின்றன.
அண்மையில் ஏற்பட்ட கொடிய மூளைச் செயலிழப்பு நோயானது (acute encephalitis syndrome - AES) பீகாரின் முசாபர்பூரில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கு வழிவகுத்தது.