மூளையிலுள்ள நரம்பு இணைப்புப் பற்றி அறிவதற்கான புதிய நிரல் நெறிமுறை
July 3 , 2022 1102 days 551 0
இந்திய அறிவியல் கழகம் (IISc) ஆனது ஒரு புதிய இயங்குபடச் செயல்முறை அலகு (GPU) அடிப்படையிலான இயந்திரக் கற்றல் வழிமுறையை உருவாக்கியுள்ளது.
இது RaAl-LiFE (முறைப்படுத்தப்பட்ட, துரிதப்படுத்தப்பட்ட, நேரியக் கற்றை மதிப்பீடு) என்று அழைக்கப்படுகிறது.
மூளையின் பல்வேறு பகுதிகளுக்கு இடையேயானத் தொடர்பைச் சிறந்த முறையில் புரிந்து கொள்ளவும், அவற்றைக் கணிக்கவும் இது அறிவியலாளர்களுக்கு உதவும்.
இது மனித மூளையின் விரவல் காந்த அதிர்வு அலை வரைவு ஆய்வு மூலம் உருவாக்கப் படும் அதிகளவிலான தரவை விரைவாகப் பகுப்பாய்வு செய்ய முடியும்.
தற்போதுள்ள அதிநவீன நிரல் நெறிமுறைகளுடன் ஒப்பிடும் போது, புதிய நிரல் நெறி முறையைப் பயன்படுத்தி இந்தக் குழுவால் விரவல் காந்த அதிர்வு அலை வரைவு ஆய்வுத் தரவை 150 மடங்கு வேகமாக மதிப்பிட முடிந்தது.