TNPSC Thervupettagam
March 9 , 2026 15 hrs 0 min 47 0
  • மீர்காட் (MeerKAT) ரேடியோ தொலைநோக்கி, பூமியிலிருந்து சுமார் 8 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு சக்திவாய்ந்த விண்வெளி "கிகா லேசர்" (ஹைட்ராக்சில் மெகாமாஸர்) ஒன்றைக் கண்டறிந்துள்ளது.
  • மெகாமாஸர் என்பது தூண்டப்பட்ட கதிர்வீச்சு உமிழ்வு மூலம் நுண் அலைகள் அல்லது ரேடியோ அலைகளைப் பெருக்கும் ஒரு இயற்கையான விண்வெளி மூலமாகும்.
  • விண்மீன் திரள்கள் மோதும் போதும் ஒன்றிணையும் போதும், தொலைதூர விண்மீன் திரளில் உள்ள ஹைட்ராக்சில் (OH) மூலக்கூறுகளால் இந்த சமிக்ஞை உருவாக்கப் பட்டது.
  • இந்த ரேடியோ சமிக்ஞை ஈர்ப்பு வில்லை மூலம் பெரிதாக்கப்பட்டது, இது ஒரு பெரிய விண்மீன் திரள், ஒரு தொலைதூர மூலத்திலிருந்து வரும் ஒளியை வளைத்து பெருக்கும் நிகழ்வாகும்.
  • தென்னாப்பிரிக்காவில் அமைந்துள்ள மீர்காட் ரேடியோ தொலைநோக்கியானது ஸ்கொயர் கிலோமீட்டர் அரே (SKA) ரேடியோ வானியல் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்