மெக்கன்ஸே உலகளாவிய நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான அறிக்கை
June 28 , 2018 2686 days 879 0
மெக்கன்ஸே உலகளாவிய நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான சமீபத்திய அறிக்கையின் படி, இந்தியாவில் பாலின சமத்துவமின்மையானது வேலை செய்யும் இடத்தில் மிகவும் அதிக அளவில் உள்ளது. சட்டப் பாதுகாப்பு மற்றும் அரசியல் பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் பாலின சமத்துவமின்மை காணப்படுகிறது.
பாலின சமத்துவமின்மையில் இந்தியாவின் மதிப்பெண் ஆனது வேலை செய்யும் இடத்தில் 30 ஆகவும், சட்டப் பாதுகாப்பு மற்றும் அரசியல் பங்கேற்பு அடிப்படையில் 0.78 ஆகவும் உள்ளது.
GPS (GPS-Gender Parity Score) -ன் அனைத்து நான்கு வகையிலும் ஆசியா பசிபிக் சராசரியை விட இந்தியா பின்தங்கியுள்ளது. ஆனால் வங்காள தேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் முன்னிலையில் உள்ளது.
இந்த அறிக்கையானது பாலின சமநிலை மதிப்பெண் அடிப்படையில் சமநிலையை மதிப்பிட்டுள்ளது. GPS-ஆனது வேலை மற்றும் சமுதாயத்தில் நான்கு பரந்த பிரிவுகளின் கீழ் பாலின சமநிலையின் 15 குறிகாட்டிகளைப் பயன்படுத்துகிறது.
இந்த நாடுகளின் மதிப்பெண் 0 (குறிப்பிடப்படுகிற சமநிலையின்மை) முதல் 1 (குறிப்பிடப்படுகிற சமநிலை) வரை இருக்கும். இந்த மதிப்பெண் அடிப்படையில் நாடுகள் தரநிலைப்படுத்தப்படும்.