TNPSC Thervupettagam
August 5 , 2025 10 days 57 0
  • திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள மெடோக் கவுண்டி பகுதியில் உள்ள கிரேட் பெண்ட் எனுமிடத்தில் 60 ஜிகாவாட் திறன் கொண்ட நீர்மின் நிலையத்தினை அமைக்க சீனா அங்கீகரித்துள்ளது.
  • இந்த நதியானது, திபெத்தில் யார்லுங் சாங்போவாகத் தொடங்கி இந்தியா, பூடான் மற்றும் வங்காளதேசம் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
  • நான்கு நதிக்கரையோர நாடுகளும் அணைகள், கரைகள், நீர்ப்பாசன அமைப்புகள் மற்றும் தடுப்பணைகள் உள்ளிட்ட நீர் உள்கட்டமைப்புத் திட்டங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளன.
  • 2006 ஆம் ஆண்டு முதல் நீர்நிலை சார்ந்தத் தரவுப் பகிர்வுக்காக நிபுணர் நிலை நெறி முறை (ELM) இருந்த போதிலும், சீனாவும் இந்தியாவும் ஒரு இருதரப்பு நதிப் பகிர்வு ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கவில்லை.
  • 1950 ஆம் ஆண்டு அசாம்-திபெத் நிலநடுக்கம் ஆனது மெடோக்கை மையமாகக் கொண்டு பரவலான வெள்ளம் மற்றும் நதியின் கீழ்நோக்கியப் படுகையில் பேரழிவை ஏற்படுத்தியதால் பிரம்மபுத்ரா படுகை ஒரு செயலில் உள்ள நில அதிர்வு மண்டலத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்