TNPSC Thervupettagam

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு

February 3 , 2026 14 days 66 0
  • முதன்முறையாக, மெட்ராஸ் உயர் நீதிமன்றம் 'சூப்பர் லா கோர்ட்ஸ்' எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் இயங்கும் ஒரு வழிமுறை அமைப்பைப் பயன்படுத்த உள்ளது.
  • இது, வழக்குகளை மிகவும் விரைவாக விசாரிப்பதற்கும், வழக்குகளை விரைந்து முடிப்பதற்கும், நீதி வழங்கும் அமைப்பில் நேரத்தையும் ஆற்றலையும் சேமிக்கும் நோக்கத்துடன், வழக்கு ஆவணங்களிலிருந்துத் தேவையான பல்வேறு தகவல்களை வடிகட்டுவதற்கும் ஆகும்.
  • இந்த வழிமுறையானது, சட்ட வல்லுநர்கள் ஒரு குறிப்பிட்ட வழக்கிற்காகத் தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் உள்ள தகவல்களைக் கண்டறியவும், ஒழுங்கமைக்கவும், புரிந்து கொள்ளவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அதிக அளவிலான ஆவணங்களை கைமுறையாகத் தேடுவதிலும், குறுக்குச் சரி பார்ப்பு செய்வதிலும் உள்ள நேரத்தையும் உழைப்பையும் குறைக்கும் நோக்கில் இந்த வழிமுறை உருவாக்கப்பட்டது.
  • இருப்பினும், இது சட்டப்பூர்வ பகுத்தறிவு, நீதித்துறைத் தீர்மானம் அல்லது ஒரு வழக்கறிஞரின் தொழில்முறைத் தீர்ப்பிற்கு மாற்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டதல்ல.
  • சூப்பர்லா கோர்ட்ஸ், நீதிமன்ற நடவடிக்கைகளில் எதிர்பார்க்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு இணையான கட்டுப்பாடுகளின் கீழ் செயல்படுகிறது.
  • சூப்பர்லா கோர்ட்ஸ் அந்த வழக்கிற்காக வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே செயல்படுகிறது என்றும், அது வெளி ஆதாரங்கள், பொது அறிவு அல்லது பதிவேட்டிற்கு வெளியே உள்ள பொருட்களைக் கலந்தாலோசிப்பதில்லை என்றும் நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
  • பதிவேட்டில் தகவல்கள் கண்டறியக்கூடிய வடிவத்தில் இல்லை என்றால், வழங்கப் பட்ட ஆவணங்களில் அத்தகைய தகவல் காணப்படவில்லை என்று அந்த அமைப்பு தெரிவிக்கும்.
  • ஆவணங்கள் சூப்பர்லா கோர்ட்ஸில் பதிவேற்றப்படும் போது, அது ஆதாரமற்றப் பதிலை உருவாக்காது.
  • இந்த அமைப்பு, நீதித்துறை அறைகளில் உள்ள முத்திரை வைக்கப்பட்ட ஆவண அறைக்கு ஒத்த ஒரு பிரத்தியேக டிஜிட்டல் பணிச் சூழலை உருவாக்குகிறது என்பதோடு பின்னர் ஆவணங்கள் பயன்படுத்தக்கூடியவை என்பதை உறுதிப்படுத்த செயலாக்கப்படுகின்றன.
  • ஸ்கேன் செய்யப்பட்ட அல்லது பட அடிப்படையிலான ஆவணங்கள், தேடக்கூடிய வகையில் ஒளியியல் எழுத்து அங்கீகாரம் (OCR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேடக் கூடிய உரையாக மாற்றப்படுகின்றன.
  • செயற்கை நுண்ணறிவுப் பங்காளியின் பங்கு, மீட்டெடுக்கப்பட்ட பகுதிகளைத் தெளிவான மொழியில் மீண்டும் வெளிப்படுத்துவது அல்லது சுருக்கி வழங்குவதுடன் மட்டுமே வரம்பிடப்பட்டுள்ளது.
  • அது புதிய உண்மைகளை அறிமுகப்படுத்தாது, யூகங்களை உருவாக்காது அல்லது சட்டப்பூர்வ பகுத்தறிவைப் பயன்படுத்தாது.
  • மீட்டெடுக்கப்பட்ட பொருள் ஒரு பதிலுக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், அந்த அமைப்பு அதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
  • சூப்பர்லா கோர்ட்ஸ் ஒரு விதிவிலக்காக ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் எச்சரிக்கையான ஆவண உதவியாளராகச் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்