TNPSC Thervupettagam

மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தேர்வு

May 22 , 2025 8 hrs 0 min 26 0
  • தலைமை நீதிபதிகள் D.Y. சந்திரசூட் மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோரின் பதவிக் காலத்தில், அவர்கள் மொத்தம் 17 நீதிபதிகளில் BC, OBC, MBC, SC, அல்லது ST சமூகங்களைச் சேர்ந்த 15 பேரை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமித்தனர்.
  • நியமிக்கப்பட்ட 34 பெண்களில், பலர் BC, OBC, MBC, SC அல்லது ST சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த (BC) ஒருவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த (MBC) ஒருவர் மற்றும் இதரப் பிற்படுத்தப் பட்ட வகுப்பினைச் சேர்ந்த (OBC) சேர்ந்த மூன்று பேர் உட்பட 5 பெண்கள் நியமிக்கப் பட்டனர்.
  • தெலுங்கானா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், இராஜஸ்தான், கௌஹாத்தி மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் பல்வேறு பொதுப் பிரிவு சாராத குழுக்களைச் சேர்ந்த பெண்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
  • ஆந்திரப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் நியமனத்தில் பொதுப் பிரிவு சாராத பிரிவுகளைச் சேர்ந்த நியமனம் 27.3% பங்கைக் கொண்டுள்ளது என்பதோடு இது 24.4% என்ற தேசிய சராசரியை விட அதிகமாகும்.
  • தென் மாநிலங்களில் பொதுப் பிரிவு சாராதப் பிரிவுகளைச் சேர்ந்தத் தனிநபர்களின் பிரதிநிதித்துவம் ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தது.
  • கேரளாவில் மட்டும், அங்கீகரிக்கப்பட்ட நியமனதாரர்களில் சுமார் 20 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் பொதுப் பிரிவு சாராத பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.
  • இதற்கு மிகவும் நேர்மாறாக, கொல்கத்தா, டெல்லி, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஒரிசா, பஞ்சாப் மற்றும் ஹரியானா, பாட்னா மற்றும் திரிபுரா ஆகிய ஒன்பது உயர் நீதிமன்றங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நியமனதாரர்களும் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • குஜராத், உத்தரகாண்ட் மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், பொதுப் பிரிவு சாராத பிரிவுகளைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட நியமனதாரர்களின் பங்கு சுமார் 17 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது.
  • இந்தியாவின் OBC மக்கள்தொகையில் 12.2 சதவீதத்திற்கும் அதிகமான நபர்களைக் கொண்ட பீகார், உயர்கல்வியில் சேரும் நாடு முழுவதுமுள்ள OBC பிரிவினரின் பங்கில் 8 சதவீதத்திற்கும் குறைவான பங்கினை மட்டுமே கொண்டுள்ளது.
  • இந்தியாவின் OBC மக்கள்தொகையில் சுமார் 10% பேர் தமிழ்நாட்டில் வசிக்கின்றனர் இது தேசிய அளவில் உயர்கல்வியில் சேரும் 13% OBC நபர்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்