மெட்ராஸ் பயால் பள்ளிகளில் (திண்ணைப் பள்ளி) சமூகப் பிரிவினை
August 10 , 2025 2 days 38 0
1871 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் கல்விசார்க் கணக்கெடுப்பு, பயால் பள்ளிகளில் தீவிரமான சாதி மற்றும் வர்க்கப் பிரிவுகள் இருந்ததை எடுத்துக் காட்டுகிறது.
உயர்சாதிக் குழந்தைகள் பல மதச் சடங்குகள் மற்றும் பிராமண ஆசிரியர்களுக்கு பரிசுகளுடன் விரிவான சேர்க்கை விதிகளை/சடங்குகளைக் கொண்டிருந்தனர்.
செல்வ வளம் மிக்க பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் மாணவர் எண்ணிக்கை மற்றும் பரிசுகளின் அடிப்படையில் மாதந்தோறும் ஐந்து முதல் இருபத்தைந்து ரூபாய் வரை சம்பாதித்தனர்.
ஏழைக் குழந்தைகளுக்கு சேர்க்கைச் சடங்குகள் என எதுவும் இல்லை, எழுத்துக்களைக் கற்றுக் கொண்ட பிறகு தான் ஒன்று முதல் இரண்டு அணா வரை செலுத்தினர்.
ஏழ்மை நிலையில் இருந்த பகுதிகளில் அமைந்த பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் குறைந்தபட்சக் கட்டணம் மற்றும் பரிசுகளிலிருந்து மாதத்திற்கு ஐந்து முதல் பத்து ரூபாய் வரை சம்பாதித்தனர்.
முஸ்லிம் பள்ளிகளில் மாதாந்திரக் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை என்பதோடு, ஆசிரியர்கள் பாடங்களைக் கற்பித்தல் மற்றும் பண்டிகைகளின் போது தன்னார்வ அடிப்படையில் வழங்கப் பட்ட பரிசுகளை மட்டுமே சார்ந்திருந்தனர்.
"பயால்" என்ற சொல் சூழலைப் பொறுத்து வெவ்வேறு விஷயங்களைக் குறிக்கலாம்.
இது பொதுவாக இந்திய வீடுகளில் பொதுவாகக் காணப்படும் ஒரு உயர்த்தப்பட்ட மேடை அல்லது வராண்டாவைக் குறிக்கிறது.