தமிழ்நாடு வனத்துறையானது, தூத்துக்குடி மாவட்டத்தின் தேரி வனப்பகுதியில் மெட்ராஸ் முள்ளெலி குறித்த தனது முதல் ஆய்வைத் தொடங்கியுள்ளது.
மெட்ராஸ் முள்ளெலியானது (Paraechinus nudiventris), உள்ளூரில் முள்ளெலி என்று அழைக்கப் படுகிறது என்பதோடுஇது தென்னிந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு அரியவகை இரவு நேரப் பாலூட்டி ஆகும்.
இந்த ஆய்வானது தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மேம்பட்ட வனவிலங்குப் பாதுகாப்பு நிறுவனம் (AIWC) தலைமையில் நடத்தப்படுகிறது.
ரேடியோ தொலையளவியல் தொழில்நுட்பமானது, விலங்குகளின் நடமாட்டம், வாழ்விடப் பயன்பாடு மற்றும் நகரமயமாக்கல், பூச்சிக்கொல்லியின் தாக்கம் போன்ற அச்சுறுத்தல்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும்.
இந்த ஆய்வானது ஒரு பாதுகாப்புச் செயல் திட்டத்தைத் தயாரிப்பதையும், IUCNன் செந்நிறப் பட்டியலில் "தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்" என்ற நிலையிலிருந்து "அச்சுறு நிலையில்" உள்ள இனமாக மறுவகைப்படுத்துவதை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.