மெட்ராஸ் முள்ளெலி (பாராயெச்சினஸ் நுடிவென்ட்ரிஸ்) என்பது தென்னிந்தியாவில் காணப்படும் ஓர் இரவுநேர, முள்ளுள்ள பாலூட்டியாகும், இது IUCN செந்நிறப் பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த (LC) இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இது தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம், சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் ஊத்துமலை பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், வனத்துறையினரால் புகைப்படம் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
மெட்ராஸ் முள்ளெலி மற்றும் பிற வனவிலங்குகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு தெரிவிக்க மாணவர்கள், தன்னார்வலர்கள், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் கிராமவாசிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
வனவிலங்கு விழிப்புணர்வை ஆதரிக்க பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வனக்காவலர் சகோதரன் / வனக்காவலர் சகோதரி பரிந்துரைக்கப்படுவார்கள், அதே நேரத்தில் கிராம வனக்குழுக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவும்.