மிக சமீபத்தில், துகள் முடுக்கி மூலமான திரள் நிறமாலையியல் (AMS) நுட்பத்தினைப் பயன்படுத்தி கதிரியக்க கார்பன் கால கணிப்பு முறையானது மெஹர்கரில் உள்ள ஒரு வேளாண் சார் குடியேற்றத்தின் காலக் கட்டத்தினை முன்னர் நம்பப்பட்ட கி.மு. 8000 ஆண்டிலிருந்து குறைத்து சுமார் கி.மு. 5200 ஆண்டுக்கு முந்தையது என குறிப்பிட்டு உள்ளது.
ஒரு புதிய கற்காலத் தளமான மெஹர்கர் என்பது, பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள போலன் கணவாயின் நுழைவு பகுதியில் அமைந்துள்ளது.
இது சிந்து நதியின் மேற்கே, குவெட்டா, கலாட் மற்றும் சிபி ஆகியவை இடையே போலன் கணவாய் அருகே அமைந்துள்ளது.
இந்த இடம் ஆனது, கோதுமை, பார்லி மற்றும் கால்நடைகள் வளர்க்கப்பட்டதற்கான சான்றுகளுடன் ஆரம்பகால வேளாண் கிராமம் இருந்ததை வெளிப்படுத்துகிறது.
பண்டைய உலகில் பருத்தி பயன்படுத்தப்பட்டப் பழமையான / ஆரம்பகால இடம் இது ஆகும்.
இந்த இடமானது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களான ஜீன்-பிரான்சுவா ஜாரிஜ் மற்றும் கேத்தரின் ஜாரிஜ் தலைமையிலான ஒரு குழுவினரால் 1974 ஆம் ஆண்டில் கண்டறியப் பட்டது.