மேகக்கணிமை முறையில் கட்டமைக்கப்பட்ட உலகின் முதல் செயல்விளக்க செயற்கைக் கோள்
February 26 , 2023 1031 days 490 0
இஸ்ரோவின் SSLV-D2 எனப்படும் புதிய குறு ஏவுகலத்தில் பயணம் செய்த JANUS-1 என்ற செயற்கைக் கோளானது, அதன் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது.
இது முழுமையாக ஓர் இந்திய நிறுவனத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையிலான மேகக் கணிமைத் தளத்தினைப் பயன்படுத்தி கருத்துருவாக்கப்பட்ட, வடிவமைக்கப் பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோள் ஆகும்.
இது அன்டாரிஸ் மேகக்கணிமை மென்பொருள் தளம் மற்றும் SatOSsoftware ஆகியவற்றினைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்பட்ட, மென் பொருள் மூலமாக வரையறுக்கப்பட்ட 6U தொழில்நுட்ப விளக்கச் செயற்கைக்கோள் ஆகும்.
JANUS-1 ஆனது வெறும் 10 மாதங்களில், இதர செயற்கைக் கோள் ஆய்வுப் பணிகளை விட 75% குறைவான செலவில் வடிவமைக்கப் பட்டுக் கட்டமைக்கப்பட்டது.