இந்தியக் கடற்படையானது மேகயான் 25 எனப்படும் 3வது வானிலை மற்றும் கடல்சார் கருத்தரங்கினைத் தொடங்கியுள்ளது.
மேகயான்-25 என்பது உலக வானிலை அமைப்பின் (WMO) கீழ் தொடங்கப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான ஒரு முதன்மையானப் பருவநிலைக் கண்காணிப்பு மற்றும் தரவுப் பகிர்வு முன்னெடுப்பாகும்.
இது உலக வானிலை அமைப்பு (WMO) உருவாக்கப்பட்டதை நினைவு கூர்வதற்காகவும், 2025 ஆம் ஆண்டிற்கான WMO தினத்தினை (ஆண்டுதோறும் மார்ச் 23 அன்று கொண்டாடப் படுகிறது) கொண்டாடுவதற்கான நிகழ்ச்சியுமாகும்.
2025 ஆம் ஆண்டு WMO தினத்துடன் சேர்த்து நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கின் கருத்துரு, ‘Closing the Early Warning Gap Together' என்பதாகும்.
இது கடற்படை பெருங்கடல் ஆய்வியல் & வானிலை இயக்குநரகம் (DNOM) மற்றும் SAC-ISRO ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாக MOSDAC-IN எனும் வலைதளச் சேவைகள் தொடங்கப்பட்டன.
இந்தியக் கடற்படையானது, 10 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு “சாகர்மாந்தன்” எனும் தனது தொழில்முறை இதழை அதன் 10வது பதிப்புடன் மீண்டும் வெளியிடத் தொடங்கியுள்ளது.
WMO ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு முகமையாகும்.
இது வானிலை, செயல்பாட்டு நீரியல், பருவநிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் கவனம் செலுத்துகிறது.
1873 ஆம் ஆண்டு வியன்னா சர்வதேச வானிலை காங்கிரஸில் நிறுவப்பட்ட சர்வதேச வானிலை அமைப்பிலிருந்து (IMO) WMO உருவானது.
1950 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதியன்று மிக அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்ட WMO அமைப்பின் தலைமையகமானது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் அமைந்து உள்ளது.
இது 1951 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு முகமையாக மாறியது.