மேகாலயா சுகாதார காப்பீட்டுத் திட்டம் (MHIS IV - Meghalaya Health Insurance Scheme)
December 23 , 2018 2422 days 859 0
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைந்த மேகாலயா சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை மேகாலயாவின் முதல்வரான கான்ராட் K. சங்மா துவங்கி வைத்தார்.
இந்த திட்டமானது குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களில் அடிமட்டத்தில் உள்ள 40 சதவீதத்தை இலக்காகக் கொண்டுள்ள மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைப் போலல்லாமல் மாநிலத்தின் அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கியது ஆகும்.