மத்தியப் புலனாய்வுப் பிரிவானது "மேக் சக்ரா" பெயரிடப்பட்ட நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.
இது நியூசிலாந்தில் உள்ள அதிகாரிகளிடமிருந்துப் பெறப்பட்டத் தகவல்களின் அடிப்படையிலும் சிங்கப்பூர் அரசின் சர்வதேச காவல் துறையின் சிறப்புப் பிரிவில் இருந்துப் பெறப்பட்ட உள்ளீடுகளையும் பின்பற்றுகிறது.
இது சிறார் பாலியல் வன்கொடுமை சார்ந்த தகவல்களின் புழக்கத்திற்கும் பகிர்வுக்கும் எதிரான, இந்தியா முழுவதுமான ஒரு இயக்கமாகும்.
20 மாநிலங்கள் மற்றும் ஒரு ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள 59 இடங்களில் இதற்கான தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 100 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 5,000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளைக் கொண்ட 50க்கும் மேற்பட்ட குழுக்களை அடையாளம் காண இந்த விசாரணை வழி வகுத்தது.
"கார்பன் நடவடிக்கை" என்று பெயரிடப்பட்ட இதே போன்றப் பயிற்சியினை 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டது.
கடந்த 5 ஆண்டுகளின் சராசரியை எடுத்துக் கொண்டால், POCSO சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற நபர்களின் விகிதம் சுமார் 32% மட்டுமே உள்ள நிலைமையில், நிலுவையில் உள்ள வழக்குகளின் சதவீதம் 90% ஆகும்.