ஜம்மு காஷ்மீரில் சமூக ஊடகங்களின் பயன்பாட்டை மீண்டும் தொடங்கிய பின்னர், இப்போது இணையத்தை மேக் (ஊடக அணுகுக் கட்டுப்பாடு - media access control) பிணைப்புச் செயல்முறை மூலம் மட்டுமே அணுக முடியும்.
MAC பிணைப்பு என்பது இணைய அணுகலை அனுமதிப்பதற்காக பயனரின் கணினியின் MAC முகவரி மற்றும் இணைய நெறிமுறை முகவரி (IP - Internet protocol) ஆகியவை பிணைக்கப்பட்ட ஒரு செயல்முறையாகும்.
இந்தச் செயல்முறையின் மூலம், ஒரு குறிப்பிட்ட கணினியின் MAC முகவரி மற்றும் IP முகவரி பிணைக்கப்பட்ட கோரிக்கையானது ஏற்றுக் கொள்ளப்படும்.
MAC மற்றும் IP முகவரி பிணைக்கப்பட்டுள்ள கணினியைப் பயன்படுத்தி ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட வலைத் தளங்களை மட்டுமே அணுக முடியும் என்பதே இதன் பொருளாகும். மற்ற இணைய அணுகல்களை மேற்கொள்ள முடியாது.