பிரபலப் பொருளாதார நிபுணரான குஜராத்தின் மேக்நாத் தேசாய் சமீபத்தில் காலம் ஆனார்.
மார்க்சியப் பொருளாதாரக் கோட்பாடு (1973), பயன்பாட்டுப் பொருளாதார அளவியல் (1976), Marx’s Revenge (2002) மற்றும் Who Wrote the Bhagavadgita? (2014) உள்ளிட்ட தாக்கம் மிக்கப் படைப்புகளை அவர் எழுதியுள்ளார்.
ஐக்கியப் பேரரசின் அரசியல் மற்றும் சமூக நிலப்பரப்பில் மிகவும் புதிய தளத்தை உருவாக்கிய தொழிலாளர் கட்சியில் பங்கு பெற்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் இவரே ஆவார்.
கல்வித்துறைக்கு அவர் ஆற்றிய வாழ்நாள் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக 2008 ஆம் ஆண்டு இந்திய அரசினால் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.