TNPSC Thervupettagam

மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவு

October 24 , 2025 12 days 71 0
  • சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம், இந்த ஆண்டு ஏழாவது முறையாக, 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியன்று அதன் முழு நீர்த்தேக்க அளவான 120 அடியை எட்டியது.
  • இதன் காரணமாக, 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப் பட்டு உள்ளது.
  • மேட்டூர் அணையானது 2025 ஆம் ஆண்டின் ஜூன் 12, ஜூலை 05, ஜூலை 28, ஆகஸ்ட் 19, செப்டம்பர் 15 மற்றும் அக்டோபர் 03 ஆகிய தேதிகளில் அதன் முழு கொள்ளளவை எட்டியது.
  • கடைசியாக இந்த அணை ஒரு வருடத்தில் ஏழு முறை நீர்மட்டத்தை எட்டியது 1977 ஆம் ஆண்டு ஆகும்.
  • 2024 ஆம் ஆண்டில், அது மூன்று முறை நீர்மட்டத்தை எட்டியது.
  • இந்த அணையின் நீர்மட்டம் (முழு நீர்த்தேக்க அளவு) 120 அடி ஆகும்.
  • இந்த அணையின் கொள்ளளவு 93.47 டிஎம்சி அடி ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்