பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது ஒரு மேம்படுத்தப்பட்ட சாஃப் தொழில்நுட்பத்தினை உருவாக்கியுள்ளது.
எதிர்நாட்டு ஏவுகணைகளிலிருந்து இந்திய விமானப்படையின் ஜெட் போர் விமானங்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.
சாஃப் என்பது உலகம் முழுவதுமுள்ள இராணுவங்களால் பயன்படுத்தப்படும் மின்னணு முறை எதிர்ப்பு தொழில்நுட்பமாகும்.
இது ஜெட் போர் விமானங்கள் (அ) கடற்படை கப்பல்கள் போன்ற உயர்மதிப்புடைய இலக்குகளை ரேடார்களிலிருந்தும் எதிரி நாட்டின் ஏவுகணை அமைப்புகளின் ரேடியோ அதிர்வெண் வழிகாட்டு முறைகளிலிருந்தும் பாதுகாப்பதற்காக வேண்டி பயன்படுத்தப் படுகிறது.