மேம்பட்ட இழுவை பீரங்கித் துப்பாக்கி அமைப்பு (ATAGS)
September 16 , 2017 2878 days 1005 0
உள்நாட்டு தொழில்நுட்பத்தினால் தயாரிக்கப்பட்ட ஏ.டி.ஏ.ஜி.எஸ் எனும் மேம்பட்ட இழுவை பீரங்கித் துப்பாக்கிகள் (Advanced towed Artillery Gun System - ATAGS) 48 கி.மீ தூரமுடைய இலக்குகளை தாக்கி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
தனியார் துறை மற்றும் டி.ஆர்.டி.ஓ எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கூட்டிணைவால் இந்த பீரங்கித் துப்பாக்கி மேம்படுத்தப்பட்டுள்ளது.
பினாகா எனும் பலகுழல் ஏவுகணை செலுத்திக்கு (Multi Barrel rocket launching System) பின்பற்றப்பட்டது போல் இதன் மேம்பாட்டிற்கும் கூட்டமைப்பு அடிப்படை மாதிரி பின்பற்றப்பட்டுள்ளது (Consortium Based model)
1980’களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட போபர்ஸ் பீரங்கிக்குப் பிறகு, இதுவரை எந்த வித புது துப்பாக்கிகளுடன் கூடிய பீரங்கிகளும் இராணுவத்தில் உட்புகுத்தப்படவில்லை.
கடந்த ஆண்டு, 145 M-777 எனும் அதிநவீன – இலகு ஹோவிடைசர் துப்பாக்கிகளை (Ultra-Light Howitzers) வாங்க இந்தியா அமெரிக்காவோடு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.