TNPSC Thervupettagam

மேரி பஞ்சாயத்து செயலி

July 28 , 2025 15 days 85 0
  • இந்தச் செயலியானது 2025 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க உலகத் தகவல் சங்க உச்சி மாநாட்டின் (WSIS) சாம்பியன் விருது வழங்கப்பட்டு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • இது கலாச்சாரப் பன்முகத் தன்மை மற்றும் அடையாளம், மொழியியல் பன்முகத் தன்மை மற்றும் வட்டார உள்ளடக்கம் என்ற செயல்வரிசைப் பிரிவின் கீழ் வழங்கப் பட்டது.
  • இந்த விருதானது 2025 ஆம் ஆண்டு WSIS+20 உயர்நிலை நிகழ்வின் போது வழங்கப் பட்டது.
  • இது சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் (ITU) ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இது முன்னதாக புது டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ஒன்றியப் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் எனப்படும் லாலன் சிங்கிற்கு வழங்கப்பட்டது.
  • இந்தச் செயலியானது எண்ணிம வழிமுறைகள் மூலம் குடிமக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை முன்னேற்ற உதவியுள்ளது.
  • இது இந்தியாவின் 2.65 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகள் மற்றும் சுமார் 950 மில்லியன் கிராமப்புறக் குடியிருப்பாளர்களுக்கு அதிகாரத்தினை அளிக்கிறது.
  • இது பஞ்சாயத்து அமைப்புகளின் நிதி ஒதுக்கீடுகள், வரவுகள், கொடுப்பனவுகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகள், பொது உள் கட்டமைப்பு மற்றும் குடிமைச் சேவைகள் பற்றிய விவரங்களின் நிகழ்நேர அணுகலை வழங்குகிறது.
  • இந்தச் செயலியானது கிராமப் பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்கள் (GPDPs), திட்டக் கண்காணிப்பு, கிராமப் பஞ்சாயத்து மட்டத்தில் வானிலை முன்னறிவிப்புகள், சமூகத் தணிக்கைக் கருவிகள், நிதிப் பயன்பாட்டுத் தரவுகள் மற்றும் புவி சார் குறியிடப்பட்ட மற்றும் புவிசார் மேம்பாட்டு அணுகல் அம்சங்களுடன் குறை தீர்க்கும் வசதிகளையும் வழங்குகிறது.
  • இது 12க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் இயங்குகிறது.
  • இந்தச் செயலியானது அதன் பன்மொழி இடைமுகம் மூலம் உள்ளடக்கத்தை உறுதி செய்கிறது.
  • இதில் குடிமக்கள் புதியத் திட்டங்களை முன்மொழியலாம், செயல்படுத்தப்பட்டப் பணிகளை மதிப்பாய்வு செய்து மதிப்பிடலாம் மற்றும் கிராம சபை நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் முடிவுகளை அணுகலாம்.
  • இது கிராமப்புற நிர்வாகத்தில் மக்களின் அதிக ஈடுபாட்டையும் வெளிப்படைத் தன்மையையும் மேம்படுத்துகிறது.
  • WSIS+20 உயர்நிலை நிகழ்வு ஆனது ஜூலை 07 முதல் 11 ஆம் தேதி வரையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றது.
  • இது முதல் WSIS அமைப்பின் இருபது ஆண்டுகள் நிறைவைக் குறிக்கிறது.
  • இது ITU மற்றும் சுவிஸ் கூட்டமைப்பு ஆகியவற்றால் இணைந்து நடத்தப் பட்டது.
  • இது ITU, ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO - United Nations Educational, Scientific and Cultural Organization), ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (UNDP - United Nations Development Programme) மற்றும் வர்த்தகம் மற்றும் மேம்பாடு குறித்த ஐக்கிய நாடுகள் மாநாடு (UNCTAD - United Nations Conference on Trade and Development) ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப் பட்டது.
  • இந்த மன்றம் உள்ளடக்கிய தகவல் சமூகத்தினை உருவாக்குவதில் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் ஒரு தளமாகச் செயல்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்