உலகின் முக்கிய LNG மையங்களான ராஸ் லப்பான் தொழில் நகரம் மற்றும் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு மேற்கு ஆசியாவில் மோதல் தீவிரமடைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய LNG ஏற்றுமதி மையங்களில் ஒன்றாகும் ராஸ் லப்பானில் ஏற்பட்டுள்ள சேதம் உலகளாவிய எரிவாயு விநியோகம் குறித்த கவலையை எழுப்பி உள்ளது.
இந்தத் தாக்குதல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிசக்தி விநியோகத்தைத் தடுத்து, உலகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளன.
ராஸ் லப்பான் வழியாக கத்தாரிலிருந்து வரும் LNG இறக்குமதியை இந்தியா பெரிதும் நம்பியுள்ளதால், இது இந்தியாவையும் பாதிக்கிறது.