2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று காசாவில் ஏற்பட்ட முதல் பஞ்சத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட பஞ்சமாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) உறுதிப்படுத்தியுள்ளது.
ஐ.நா. சபையின் மதிப்பீடுகளின்படி, காசாவில் சுமார் 500,000 மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஐ.நா. சபையானது, சரிபார்க்கப்பட்டத் தரவுகளை மேற்கோள் காட்டி மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) இதனை உறுதிப்படுத்தி உள்ளது.
ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்டம் சார்ந்த வகைப்பாடு (IPC) ஆனது தினசரிப் பட்டினி காரணமாக 5 வீடுகளில் 1 வீட்டில் உயிரிழப்பும், 3 குழந்தைகளில் 1 குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதாகவும் பதிவு செய்துள்ளது.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் பஞ்ச சூழல்கள் டெய்ர் அல்-பலா மற்றும் கான் யூனிஸ் பகுதிகளுக்கு பரவக் கூடும் என்று IPC கணிப்புகள் குறிப்பிடுகின்றன.