மேற்கு டிராகோபனின் காப்பகத்திலான இனப்பெருக்கம் ஆனது அதன் எண்ணிக்கையை நிலைப்படுத்த உதவியது என்பதோடுஆனால் அதன் நீண்ட கால உயிர் வாழ்விற்கு வாழ்விடப் பாதுகாப்பு அவசியம் ஆகும்.
மேற்கு டிராகோபன் (டிராகோபன் மெலனோசெபாலஸ்) இந்தியாவின் அரிதான ஃபெசண்ட்களில் ஒன்றாகும் மற்றும் அது இமாச்சலப் பிரதேசத்தின் மாநிலப் பறவை ஆகும்.
இது ஜம்மு & காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரக்காண்ட் மாநிலங்களின் சிறிய வனப்பகுதிகளில் காணப்படுகிறது.
இந்த இனமானது IUCN (சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம்) செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக் கூடிய (VU) இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
நன்கு வளர்ந்த சுமார் 3,000–9,500 பறவைகள் காடுகளில் உயிர்வாழ்வதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
முதல் வெற்றிகரமான காப்பகத்திலான இனப்பெருக்கம் 2005 ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தின் சரஹான் ஃபெசன்ட்ரியில் அடையப்பட்டது.