மேற்கு வங்க (கும்பல் வன்முறைத் தடுப்பு) மசோதா, 2019
September 1 , 2019 2179 days 724 0
மேற்கு வங்க சட்டசபையானது கும்பல் வன்முறைகளையும் கும்பல் கொலைகளையும் தடுத்து மற்றும் அவற்றிற்கு தண்டனை வழங்கும் நோக்கில் மேற்கு வங்க (கும்பல் கொலை தடுப்பு) மசோதா 2019 என்ற மசோதாவை நிறைவேற்றி இருக்கின்றது.
ஒரு நபரைத் தாக்கி காயப்படுத்தும் செயலில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைத் தண்டனை அளித்திட இம்மசோதா முன்மொழிகின்றது.
கால்நடைக் கடத்தல் மற்றும் குழந்தைத் திருட்டு போன்ற வதந்திகளின் காரணமாக மக்கள் சாகும் வரை தாக்கப்படும் சம்பவங்கள் அதிகப்படியாக நடந்ததன் காரணமாக இம்மசோதா நிறைவேற்றப் பட்டிருக்கின்றது.
ராஜஸ்தானும் இம்மாதிரியான மசோதா ஒன்றை நிறைவேற்றியிருக்கின்றது. அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக உள்ளது.