TNPSC Thervupettagam

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் 2026 - சாதனை அளவிலான வாக்குப்பதிவு

May 2 , 2026 15 hrs 0 min 15 0
  • 2026 ஆம் ஆண்டிற்கான மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தலில் சுதந்திரத்திற்குப் பிறகு இதுவரையில் இல்லாத அளவில் அதிகபட்சமாக 92.47% வாக்குப்பதிவை பதிவு செய்துள்ளது.
  • தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன, முதல் கட்டத்தில் (ஏப்ரல் 23) 93.19% மற்றும் இரண்டாம் கட்டத்தில் 91.66% வாக்குகள் பதிவாகின.
  • இம்மாநிலத்தில் மொத்தம் சுமார் 6.81 கோடி வாக்காளர்கள் உள்ளனர், இதில் பெண்களின் வாக்குப்பதிவு (92.28%) ஆண்களின் வாக்குப்பதிவை (91.07%) விட அதிகமாக இருந்தது.
  • இதற்கு முன் மேற்கு வங்கத்தில் 2011 ஆம் ஆண்டிற்கான சட்டசபைத் தேர்தலில் அதிகபட்சமாக 84.72% வாக்குகள் பதிவாகியிருந்தன.
  • 2013 ஆம் ஆண்டிற்கான சட்டசபைத் தேர்தலில் 93.61% வாக்குப்பதிவு செய்து திரிபுரா தேசிய அளவிலான சாதனையைத் தன்வசம் வைத்துள்ளது.
  • மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்