மேற்கு வங்காளத்தின் ஹால்டியாவில் புதிய கடற்படைத் தளம்
January 14 , 2026 8 days 64 0
கொல்கத்தாவிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு வங்காளத்தின் ஹால்டியாவில் இந்திய கடற்படை ஒரு புதிய தளத்தை நிறுவ உள்ளது.
அதிகரித்து வரும் சீன கடற்படையின் இருப்பு மற்றும் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் தொடர்பான வளர்ந்து வரும் பிராந்தியப் பாதுகாப்புச் சூழ்நிலைகளுக்கு மத்தியில், வடக்கு வங்காள விரிகுடா பகுதியில் இந்தியாவின் கடல்சார் இருப்பை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் தற்போதைய கடற்படைப் பிரிவுகள் மும்பையில் (மகாராஷ்டிரா) மேற்கு கடற்படைப் பிரிவு, விசாகப்பட்டினத்தில் (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு கடற்படைப் பிரிவு மற்றும் கொச்சியில் (கேரளா) பயிற்சிக்கான தெற்கு கடற்படைப் பிரிவு ஆகியன ஆகும்.
இது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் முக்கிய தளத்தைக் கொண்டுள்ளது.
ஹால்டியா ஹால்டி நதிக்கு அருகில் ஹூக்ளி ஆற்றில் அமைந்துள்ளது.