TNPSC Thervupettagam

மேற்குத் தமிழ்நாட்டில் பட்டாம்பூச்சிகள் வலசை போதல்

October 20 , 2026 2 days 47 0
  • வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் பெரிய அளவிலான பட்டாம்பூச்சிகள் வலசை போதல் காணப்பட்டது.
  • நீல நிற வரியன் பட்டாம்பூச்சி (Blue Tiger), கருநீல வரியன் பட்டாம்பூச்சி (Dark Blue Tiger), வெண்புள்ளிக் கருப்பன் பட்டாம்பூச்சி மற்றும் இரு பட்டை அரளிவிரும்பி பட்டாம்பூச்சி ஆகிய பட்டாம்பூச்சிகள் மேற்கு மற்றும் தென்மேற்கு நோக்கி மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தை நோக்கி நகர்வது காணப்பட்டது.
  • நீல நிற வரியன் பட்டாம்பூச்சிகள் நிமிடத்திற்கு 72 என்ற எண்ணிக்கையில் ராசிபுரத்தைக் கடந்தன, அதே சமயம் கோயம்புத்தூரில் நிமிடத்திற்கு 135 பட்டாம்பூச்சிகள் என்ற அளவில் இதன் வலசைபோதல் காணப்பட்டது.
  • இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு (TNBS) 2013 ஆம் ஆண்டு முதல் இந்த வலசை போதல் முறையைக் கண்காணித்து வருகிறது.
  • மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் சமவெளிகளை நோக்கிய பின்னோக்கிய நகர்வானது பொதுவாக ஏப்ரல்-மே மாதங்களில் நிகழ்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்