மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்துப் புதிய தாவர இனங்கள்
May 27 , 2020 1879 days 749 0
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு முனையின் பசுமையான வனப்பகுதிகளில் மூன்று புதிய தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அவை பின்வருமாறு
மைர்டேசி அல்லது பன்னீர் கொய்யா குடும்பத்தின் யூஜீனியா ஸ்பேரோகார்பா வகை (Eugenia sphaerocarpa of the Myrtaceae or Rose apple family) - கக்காயம் பகுதியில் (கேரளா) உள்ள மலபார் வனவிலங்கு சரணாலயத்தில் காணப் படுகிறது.
சீத்தாப்பழத்தின் அன்னோனேசி குடும்பத்தின் கோனியோதலாமஸ் செரிசியஸ் வகை (Goniothalamus sericeus of the Annonaceae family of custard apple) - தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வனவிலங்குச் சரணாலயத்தில் காணப் படுகிறது.
மெலஸ்டோமாடேசியின் மெமசிலோன் நெர்வோசம் (Memecylon nervosum of the Melastomataceae).