மேற்குத் தொடர்ச்சி மலையில் 28 நெகிழிப் பொருட்களுக்குத் தடை
April 20 , 2025 10 days 71 0
தமிழகத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 28 நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்தத் தடையானது நீலகிரி முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகத்தியர் மலை உயிர்க்கோளக் காப்பகம் வரை விரிவுபடுத்தப்படும்.
இந்தத் தடையானது அனைத்து மலைவாழ் தளங்கள், சரணாலயங்கள் மற்றும் புலிகள் வளங்காப்பகங்களுக்கும் பொருந்தும்.
தடை செய்யப்பட்ட இப்பொருட்களில் தண்ணீர் / பழச்சாறுகள் அடைக்கப் பயன்படும் ஒருமுறை மட்டுமே என்று பயன்படுத்தக் கூடிய நெகிழிக் குடுவைகள், உணவுப் பொதிகளுக்குப் பயன்படுத்தப் படும் நெகிழித் தாள்கள் / ஒட்டுச் சுருள்கள், உணவு மேசைகளில் விரிக்கப் பயன்படும் நெகிழித் தாள்கள், நெகிழித் தட்டுகள், நெகிழிப் படலமிடப் பட்ட காகிதத் தட்டுகள், நெகிழிப் படலமிடப்பட்ட காகிதக் கோப்பைகள், நெகிழி டீ கோப்பைகள், நெகிழிக் குவளைகள், வெண்மெத்துகள் ஆகிய அனைத்தும் அடங்கும்.
நெகிழிப் படலமிடப்பட்ட சிறு பைகள், நெய்யப்படாத சிறு பைகள், தண்ணீர் பைகள்/ பொதிகள், நெகிழி உறிஞ்சு குழாய்கள், நெகிழிக் கொடிகள், நெகிழிக் குச்சிகள் கொண்ட காது குடையும் பஞ்சுகள், அனைத்து அளவு மற்றும் தடிமன் கொண்ட நெகிழி பைகள், நெகிழிக் குச்சிகள் கொண்ட மிட்டாய்கள், நெகிழிக் குச்சிகள் கொண்ட பனிக் கூழ், அலங்காரத்திற்கான பாலிஸ்டிரீன் போன்றவற்றுக்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நெகிழி முள்கரண்டிகள், நெகிழிக் கரண்டிகள், நெகிழிக் கத்திகள், இனிப்புப் பெட்டிகளில் பொதியிடும் அல்லது பொதிச் சுருள்கள், அழைப்பிதழ் அட்டைகளைச் சுற்றிச் சுற்றப் பட்டுள்ள அல்லது பொதிச் சுருள்கள், சிகரெட் பாக்கெட்டுகளைச் சுற்றிச் சுற்றப் பட்டுள்ள சுருள்கள், 100 மைக்ரான் அளவிற்குக் குறைவான நெகிழி அல்லது PVC விளம்பர திரைச்சீலைகள், நெகிழிக் கிளறு கரண்டிகள் மற்றும் நெகிழித் தட்டுகள் ஆகியவையும் இனி தடை செய்யப்பட வேண்டும் என்று அமர்வு நீதிமன்றம் / ஈராயம் தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் இந்த மாநிலம் முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
2019 ஆம் ஆண்டில் நீதிபதிகள் நீலகிரி மற்றும் கொடைக்கானலில் குறிப்பிட்ட நெகிழிப் பொருட்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
இம்மாநில அரசானது, 2019 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான அதன் அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு நீதிபதிகளுக்கு உத்தரவிட்டனர்.
இனிமேல் நீலகிரி, கொடைக்கானல் மலைகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுவதிலும் ஒரு நெகிழிப் பொதி, சிறு பொதி அல்லது பொதி செய்யப் பயன்படும் நெகிழிப் பொருட்களைக் கூட பயன்படுத்த முடியாது.