TNPSC Thervupettagam

மேற்குத் தொடர்ச்சி மலையில் பட்டாம்பூச்சி இடப்பெயர்வு

November 22 , 2026 8 days 101 0
  • 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் பட்டாம்பூச்சிகளின் பெரிய அளவிலான மேற்கு நோக்கிய இடப்பெயர்வு காணப்பட்டது.
  • இந்த இடப்பெயர்வில் முக்கியமாக தூரிகை-கால் பட்டாம்பூச்சி குடும்பம் (நிம்பலிடே) மற்றும் மில்க்வீட்/பால் களைப் பட்டாம்பூச்சிகள் என்றும் அழைக்கப்படும் அதன் துணைக் குடும்பமான டானைனே (Danainae) ஆகியவை அடங்கும்.
  • பட்டாம்பூச்சி இடப்பெயர்வு மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கிழக்குத் தொடர்ச்சி மலையை நோக்கி கிழக்கு நோக்கியும் (பிப்ரவரி–மே) மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி மேற்கு நோக்கியும் (செப்டம்பர்–நவம்பர்) என ஆண்டுக்கு இரண்டு முறை நிகழ்கிறது.
  • முக்கியமாக இடம்பெயரும் இனங்களில் நீல வரியன் பட்டாம்பூச்சி, கரு நீல வரியன் பட்டாம்பூச்சி மற்றும் அரளிவிரும்பிப் பட்டாம்பூச்சி, அத்துடன் பியரிடே (Pieridae) குடும்பத்தைச் சேர்ந்த இடம்பெயரும் பட்டாம்பூச்சி ஆகியவை அடங்கும்.
  • 2026 ஆம் ஆண்டு நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அதிகபட்ச இடப்பெயர்வின் போது நிமிடத்திற்கு 100 க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் நீலகிரியைக் கடந்து செல்வது பதிவு செய்யப்பட்டது.
  • இந்த இடப்பெயர்வுப் பாதை நீலகிரியில் உள்ள கல்லாறு-குன்னூர் கணவாய் வழியாகக் கேரளா மற்றும் கர்நாடகாவை நோக்கிச் செல்கிறது.
  • ஆறு முதல் ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நீலகிரியில் இந்தப் பெரிய அளவிலான இடப்பெயர்வு காணப்பட்டது, அதே நேரத்தில் இதற்கான சரியான காரணங்கள் இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்