மேற்கூரை சூரியசக்தி உற்பத்தி திட்டம்
February 12 , 2023
878 days
416
- இந்திய அரசானது PM-KUSUM திட்டத்தினை 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ளது.
- பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்சா ஏவம் உத்தான் மகாபியன் (PM-KUSUM) திட்டமானது 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- இது 2022 ஆம் ஆண்டிற்குள் 30,800 மெகாவாட் அளவிற்கு சூரிய சக்தி உற்பத்தியினை அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயித்துள்ளது.
- இத்திட்டம் மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.
- கூறு A: 2 மெகாவாட் திறன் கொண்ட சிறிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவச் செய்வதன் மூலம் 10,000 மெகாவாட் சூரிய சக்தியை நிறுவுதலை நோக்கமாகக் கொண்டது.
- கூறு B: 20 லட்சம் சூரிய சக்தியில் இயங்கும் வேளாண் நீர் இறைப்பு இயந்திரங்களை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- கூறு C: 15 லட்சம் கட்டமைப்பில் இணைக்கப்பட்ட வேளாண் நீர் இறைப்பு இயந்திரங்களை சூரிய சக்தியில் இயங்கக் கூடியதாக மாற்றுதலை நோக்கமாகக் கொண்டது.

Post Views:
416