2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் நாடு முழுவதும் உள்ள புலிகள் வளங் காப்பகங்களை மதிப்பிடச் செய்வதற்கு அரசாங்கம் மேலாண்மைச் செயல்திறன் மதிப்பீட்டினைப் பயன்படுத்துகிறது.
கேரளாவில் உள்ள பெரியார் புலிகள் வளங்காப்பகம் (PTR) ஆனது நாட்டிலேயே சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் புலிகள் வளங்காப்பகமாக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டது.
2022 ஆம் ஆண்டு 5வது சுழற்சி மதிப்பீட்டில், சாத்புரா (மத்தியப் பிரதேசம்) மற்றும் பந்திப்பூர் (கர்நாடகா) ஆகியவை இரண்டாவது இடத்தையும், நகர்ஹோலே (கர்நாடகா) மூன்றாவது இடத்தையும் பெற்றன.
இது வரை 53 புலிகள் வளங்காப்பகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த 53 புலிகள் வளங்காப்பகங்களில் 51 மட்டுமே மதிப்பீடு செய்யப்பட்டன.
இதில் புதிதாக அறிவிக்கப்பட்ட இரண்டு புலிகள் வளங்காப்பகங்களான ராம்கர் விதாரி மற்றும் இராணிப்பூர் ஆகியவை இந்த மேலாண்மைச் செயல்திறன் மதிப்பீட்டின் தற்போதையச் சுற்றில் சேர்க்கப் படவில்லை.