- ஆளில்லா விமானங்களுக்காக (ட்ரோன்) வேண்டி மேலும் 26 பச்சை மண்டலத் தளங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
- அனுமதியில்லையெனில் அந்த ட்ரோன்கள் மேலெழும்பக் கூடாது எனும் பெரு வரைமுறையின் கீழ் ட்ரோன்களின் செயல்பாட்டை எளிதாக்குவதற்காக வேண்டி இந்த ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.
- இதற்கு உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியன ஒப்புதல் அளித்துள்ளன.
- முன்னதாக ஆறு பச்சை மண்டலத் தளங்களுக்கு அந்த அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது.
- இந்த அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் இப்போது டிஜிட்டல் ஸ்கை தளத்தில் (Digital Sky Platform) இடம் பெறும்.
- அதன் பிறகு, அனைத்துத் தனிப்பட்ட அடையாள எண் வைத்திருப்பவர்களுக்கும் இணைய வழியில் உடனடியாக பறப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.
புதிய பசுமை மண்டலத் தளங்கள்
- அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 8 தளங்கள்
- ஜார்க்கண்டில் 6 தளங்கள்
- சத்தீஸ்கரில் 4 தளங்கள்
- தெலுங்கானாவில் 2 தளங்கள்
- தமிழ்நாடு, ஆந்திரா, மேகாலயா, குஜராத், ஒடிசா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் தலா ஒரு தளம்.