உலகளாவியப் பூஞ்சை வேர்/மைக்கோரைசல் பூஞ்சை இனமிகு பகுதிகளில் சுமார் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவை அதிகாரப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டப் பகுதிகளுக்கு வெளியே உள்ளன என்பதை நிலத்தடி வலையமைப்புகளின் பாதுகாப்புச் சங்கத்தின் (SPUN) நிலத்தடி இனங்கள் தகவல் தொகுப்பு வெளிப்படுத்துகிறது.
இந்த பூஞ்சைகள் ஊட்டச்சத்து சுழற்சி, மண் ஆரோக்கியம், தாவர வளர்ச்சி மற்றும் நீண்ட கால கார்பன் சேமிப்புக்கு அவசியமாகும்.
மைக்கோரைசல் பூஞ்சைகள் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட தாவர இனங்களுடன் கூட்டு வாழ்வு தொடர்புகளை உருவாக்குகின்றன மற்றும் மண்ணில் உள்ள நுண்ணுயிர் உயிரியலில் 30% வரை பங்கு கொண்டுள்ளன.
அவை பாஸ்பரஸ் போன்ற மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் தாவரங்களுக்கு உதவுவதோடு, ஒட்டு மொத்தமான தாவர ஆரோக்கியத்தையும் மண் வளத்தையும் ஆதரிக்கின்றன.
அவை ஆண்டுதோறும் உலகளாவிய புதைபடிவ எரிபொருள் உமிழ்வுகளில் மூன்றில் ஒரு பங்கான 13 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை (CO₂) செயலாக்குவதன் மூலம் கார்பன் பிரித்தெடுப்பதில் குறிப்பிடத் தக்க பங்களிப்பை வழங்குகின்றன.
SPUN ஆனது உலகளாவிய மைக்கோரைசல் பன்முகத் தன்மையை வரைபடமாக்கும் இயந்திர கற்றல் மாதிரிகளைப் பயிற்றுவிக்க 130 நாடுகளிலிருந்து சுமார் 25,000க்கும் மேற்பட்ட புவியியல் மண் மாதிரிகள் மற்றும் சுமார் 2.8 பில்லியன் பூஞ்சை DNA வரிசைகளைப் பயன்படுத்தியது.
மின்னணு வழித் தகவல் தொகுப்பு ஆனது ஆர்பஸ்குலர் மைக்கோரைசல் (AM) பூஞ்சை மற்றும் எக்டோமிகோரைசல் (EcM) பூஞ்சை எனும் இரண்டு வகையான மைக்கோரைசல் பூஞ்சைகளில் கவனம் செலுத்துகிறது.
மூன்றாவது வகையான் எரிகாய்டு மைக்கோரைசல் (ErM) பூஞ்சை, மாதிரி கிடைப்பதற்கான குறைந்த வைப்பின் காரணமாக விலக்கப் பட்டது.
AM பூஞ்சை பன்முகத் தன்மை இனமிகு பகுதிகள் பிரேசிலிய செராடோ சவன்னாக்கள் / புல்வெளிகள், தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டலக் காடுகள் மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியா காடுகளில் கணிக்கப்பட்டன.
சைபீரியா மற்றும் கனடாவில் உள்ள வடக்கு போரியல் காடுகள், மேற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள ஊசியிலை காடுகள் மற்றும் மத்திய ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க கிரேட் லேக்ஸ் பகுதியில் மித வெப்பக் கலப்பு காடுகள் முழுவதும் EcM பூஞ்சையின் செழுமை நிறைந்த இனமிகு இடங்களாக அடையாளம் காணப்பட்டன.