TNPSC Thervupettagam

மைதிலி மொழியைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்

February 16 , 2019 2361 days 840 0
  • மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மைதிலி மொழியையும் அதன் எழுத்து வடிவத்தையும் மேம்படுத்திப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரைகளில் சிலவற்றை ஏற்றுக்கொண்டது.
  • ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிந்துரைகள் பின்வருமாறு:
    • பீகாரின் தர்பாங்காவில் காமேஸ்வர் சிங் சமஸ்கிருத பல்கலைக்கழகம் அல்லது லலித் நாராயண் மிதிலாப் பல்கலைக்கழகம் ஆகிய ஏதேனும் ஒன்றில் கையெழுத்து மற்றும் எழுத்து மையத்தை ஏற்படுத்துதல்.
    • இந்திய மொழிகளுக்கான தொழில்நுட்ப வளர்ச்சித் துறையில் மேம்படுத்தப்பட்ட மிதிலாக்சார் என்பதன் யுனிகோடு (கணினி எழுத்து) எழுத்து வடிவங்கள் தொடர்பான பணிகளை விரைவாக நிறைவு செய்தல்.
    • மிதிலாக்சார் எழுத்து வடிவங்களைக் கற்பிப்பதற்கான கேட்பொலிக் காட்சிப் பொருட்களைத் தயார் செய்தல்.
மைதிலி மொழி மற்றும் எழுத்து வடிவம்
  • இந்தியத் துணைக் கண்டத்தின் பூர்வீகமான மொழியான மைதிலி ஒரு இந்தோ ஆரிய மொழி வகையைச் சார்ந்தததாகும். இது பெரும்பாலும் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது.
  • இது பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பேசப்படுகின்றது. மேலும் இது 8-வது பட்டியலில் அங்கீகரிக்கப்பட்ட 22 இந்திய மொழிகளில் ஒன்றாகும்.
  • மிதிலாக்சார் அல்லது தீர்ஹதா என்பது பரந்த மிதிலா மொழிக் கலாச்சாரத்தின் எழுத்து வடிவம் ஆகும்.
  • இது ஒரு மிகவும் பழமையான எழுத்து வடிவம் ஆகும். மேலும் இது பரந்து விரிந்த வடகிழக்கு இந்தியாவின் எழுத்து வடிவங்களில் ஒன்றாகும்.
  • மிதிலாக்சார், பங்களா, அசாமிஸ், நேவாரி, ஒடியா மற்றும் திபெத்தியன் ஆகியன அம்மொழிக் குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்