மைத்ரி II என்பது கிழக்கு அண்டார்டிகாவில் நிறுவுவதற்கு இந்தியாவினால் முன் மொழியப் பட்ட அடுத்த தலைமுறை நுட்பத்திலான ஆராய்ச்சி நிலையமாகும் என்ற நிலையில்இது 2032 ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையம் ஷிர்மேக்கர் ஒயாசிஸ் பகுதியில் 1989 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மைத்ரி I நிலையத்திற்கு மாற்றாக அமையும்.
மைத்ரி II நிலையத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவினம் 2,000 கோடி ரூபாயாகும்.
மைத்ரி II பருவநிலை அறிவியல், பனிப்பாறையியல், உயிரியல், வளிமண்டல அறிவியல், புவி அறிவியல் மற்றும் நீண்டகாலச் சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆகியவற்றிலான பல்துறை ஆராய்ச்சியை ஆதரிக்கும்.