தவாங் என்ற இடத்தில் நடந்த மைத்ரீ திவாஸ் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அருணாச்சலப் பிரதேசத்திற்குப் பயணம் செய்தார்.
தவாங்கில் உள்ள “க்யால்வா சாங்யாங் க்யாட்சோ அதிஉயர அரங்கத்தில்” மைத்ரீ திவாஸ் (பொது மக்கள்-ராணுவ நட்பு) ஆனது இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டது.
மைத்ரி திவாஸின் 11வது பதிப்பான இது அந்தப் பிராந்தியத்தில் பொது மக்கள் -ராணுவ நட்புறவைக் கொண்டாடும் விதமாக அமைகிறது.
மேலும் கிழக்கு சியாங் மாவட்டத்தில் சிசேரி நதி பாலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை-52 ஐ ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.