TNPSC Thervupettagam

மைனாமதி மைத்திரி பயிற்சி - 2019

March 3 , 2019 2328 days 701 0
  • இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் வங்க தேச எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றிற்கிடையே நம்பிக்கைக் கட்டமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக மூன்று நாள் நடைபெறும் மைனாமதி மைத்திரிப் பயிற்சியின் 2019 ஆம் ஆண்டு பதிப்பானது நிறைவு பெற்றது.
  • இந்த கூட்டுப் பயிற்சி திரிபுராவின் அகர்தலாவில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் ஸ்ரீமந்தப்பூர் எல்லை புறக்காவல் பகுதியில் உள்ள பொதுப் பிராந்தியத்தில் நடைபெற்றது.
  • வங்கதேசத்தில் பழங்கால புத்த சமய தொல்லியல் சார் இடமான கோமிலா நகரத்திற்கு 8 கிலோ மீட்டர் மேற்கில் அமைந்துள்ள குன்றின் நினைவாக இப்பயிற்சிக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கம் கடத்தல் தடுப்பு மற்றும் குற்றத் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளை திட்டமிடுதல் மற்றும் நடத்துதல் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்