TNPSC Thervupettagam

மையப்படுத்தப்பட்ட கங்கை நீர் ஆய்வகங்கள் @ டேராடூன்

December 6 , 2019 2056 days 731 0
  • 2525 கி.மீ நீளமுள்ள கங்கை நதியில் காணப்படும் நீர்வாழ் உயிரினங்கள் நாட்டின் முதலாவது ‘மையப்படுத்தப்பட்ட கங்கை நீர் ஆய்வகங்களில்’ பாதுகாக்கப்பட இருக்கின்றன.
  • இது டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் (Wildlife Institute of India - WII) நிறுவப்பட இருக்கின்றன.
  • நாட்டில் உள்ள எந்தவொரு நதிக்கும் இல்லாத இதே வகையைச் சேர்ந்த இந்த முதலாவது நீர் ஆய்வகமானது,
    • நதியில் காணப்படும் ஒவ்வொரு இனத்தின் மரபணுக்களையும் பராமரிக்க இருக்கின்றது.
    • நதியின் அடிப்படைத் தரவுகளைப் பதிவு செய்ய இருக்கின்றது.
  • கங்கையின் துணை நதிகளான கோமதி, பெட்வா மற்றும் கோசி ஆகிய நதிகள் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் உயிரியல் கூறுகள் இந்த ஆய்வகத்தில் பாதுகாக்கப்பட இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்