மையப்படுத்தப்பட்ட கங்கை நீர் ஆய்வகங்கள் @ டேராடூன்
December 6 , 2019 2078 days 739 0
2525 கி.மீ நீளமுள்ள கங்கை நதியில் காணப்படும் நீர்வாழ் உயிரினங்கள் நாட்டின் முதலாவது ‘மையப்படுத்தப்பட்ட கங்கை நீர் ஆய்வகங்களில்’ பாதுகாக்கப்பட இருக்கின்றன.
இது டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் (Wildlife Institute of India - WII) நிறுவப்பட இருக்கின்றன.
நாட்டில் உள்ள எந்தவொரு நதிக்கும் இல்லாத இதே வகையைச் சேர்ந்த இந்த முதலாவது நீர் ஆய்வகமானது,
நதியில் காணப்படும் ஒவ்வொரு இனத்தின் மரபணுக்களையும் பராமரிக்க இருக்கின்றது.
நதியின் அடிப்படைத் தரவுகளைப் பதிவு செய்ய இருக்கின்றது.
கங்கையின் துணை நதிகளான கோமதி, பெட்வா மற்றும் கோசி ஆகிய நதிகள் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் உயிரியல் கூறுகள் இந்த ஆய்வகத்தில் பாதுகாக்கப்பட இருக்கின்றன.