மொத்த கருவுறுதல் விகிதத்தின் நிலை - லான்செட் அறிக்கை
April 15 , 2024 487 days 575 0
2050 ஆம் ஆண்டில், ஐந்து இந்தியர்களில் ஒருவர் முதியோராக இருப்பார், அதே சமயம் அவர்களைக் கவனித்துக் கொள்வதற்கு இளையோர்கள் குறைவாகவே இருப்பார்கள் அன்று அறிக்கை கூறுகிறது.
2050 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள முதியோர்களின் பங்கு 20 சதவீதத்திற்கும் அதிகமாக, அதாவது ஒரு ஐந்து பேரில் ஒருவர் என்ற வீதத்தில் இருக்கும்.
இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) - ஒரு பெண்ணுக்குப் பிறந்த குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை – மீள முடியாத வகையில் 1.29 ஆகக் குறைந்து வருகிறது என்ற நிலையில் இது 2.1 என்ற ஈடுநிலை கருவுறுதல் விகிதத்தினை விட மிக குறைவு ஆகும்.
1950 ஆம் ஆண்டில் ஒவ்வொரு பெண்ணுக்கும் சுமார் ஐந்து குழந்தைகள் என்ற வீதத்தில் இருந்த மொத்த கருவுறுதல் விகிதம் ஆனது, கடந்த 70 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்து 2021 ஆம் ஆண்டில் 2.2 குழந்தைகள் என்ற வீதத்தில் உள்ளது.
இந்தியாவில், 1950 ஆம் ஆண்டில் 6.18 ஆக இருந்த மொத்த கருவுறுதல் விகிதம் ஆனது 1980 ஆம் ஆண்டில் 4.60 ஆகவும், 2021 ஆம் ஆண்டில் 1.91 ஆகவும் குறைந்தது.
2050 ஆம் ஆண்டில், 204 நாடுகளில் 155 நாடுகள் (உலகின் 76 சதவீத நாடுகள்) ஈடுநிலை கருவுறுதல் வீத நிலையை விடக் குறைவாகவே இருக்கும்.